×

2026 தேர்தலில் வெற்றி நமக்கே திமுகவுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: 2026ல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமல்ல இந்தியாவுக்கான வெற்றி என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக செயற்குழுவில் இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எந்த தேர்தலிலும் தோற்கவில்லை. திமுகவுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் நம்மை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் சக்திவாய்ந்த, கவர்ச்சிகரமான தலைவராக (powerful, charismatic leader) ஆக இருக்கிறார். நம் கூட்டணி நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டிருக்கிறது. 2026ல் நாம் பெறும் வெற்றி தமிழ்நாட்டுக்கான வெற்றி மட்டுமல்லை; இந்தியாவுக்கான வெற்றி. ஒவ்வொரு அணியும் வெற்றிக்கு பாடுபடும். 200 இல்லை, 200க்கும் மேல் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post 2026 தேர்தலில் வெற்றி நமக்கே திமுகவுக்கு மகளிர் ஆதரவு அபரிமிதமாக இருக்கிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : 2026 elections ,DMK ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,Tamil Nadu ,India ,youth secretary ,committee ,Chief Minister ,M.K. Stalin ,DMK… ,
× RELATED சிறுபான்மையினர் தொடர்ந்து...