×

கூலி தொழிலாளியை மிரட்டிய 3பேர் கைது

பேட்டை, நவ.29: முக்கூடல் ராமசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிச்சந்திரன் மகன் முருகேசன் (24) இவர் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சுத்தமல்லி வஉசி நகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் வெங்கடேஷ்(28), அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் அருண்குமார் (29), முக்கூடல் சாஸ்தா கோவில் தெருவில் சேர்ந்த கணேசன் மகன் சுபாஷ் (24) ஆகிய 3 பேரும் சேர்ந்து வெங்கடேஷிடம் குடிக்க பணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுக்கவே கத்தியால் குத்தி விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து வெங்கடேஷ் பேட்டை போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் இசக்கி வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தார்.

The post கூலி தொழிலாளியை மிரட்டிய 3பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pettah ,Harichandran ,Murugesan ,Mukoodal Ramasamy Temple Street ,Tasmac ,Petaya ,Sudtamalli ,Vausi ,
× RELATED ஆர்.கே பேட்டை ஒன்றியத்தில் சத்துணவு பணியாளர்களுக்கு ஆலோசனை