- தூத்துக்குடி
- கருப்பசாமி
- சங்கராபுரம் புதுத் தெரு, தூத்துக்குடி
- தூத்துக்குடி காவல் கட்டுப்பாட்டு அறை
- தின மலர்
தூத்துக்குடி, டிச. 27: தூத்துக்குடியில் எஸ்எஸ்ஐ பைக்கை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி சங்கராபுரம் புதுத் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(55). இவர், தூத்துக்குடி போலீஸ் கட்டுப்பாட்டு அறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலையில் தெற்கு காட்டன் ரோட்டில் உள்ள தியேட்டர் அருகே பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். மீண்டும் வந்து பார்த்த போது, பைக்கை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.80 ஆயிரம் இருக்கும். இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post தூத்துக்குடியில் எஸ்எஸ்ஐ பைக் திருட்டு appeared first on Dinakaran.