×

சிங்கப்பெருமாள் கோவிலில் நரசிம்ம பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பாடலாதிரி நரம்ம பெருமாள் கோயில் இத்திருத்தலத்தை அறநிலையத் துறையின் அனுமதியோடு உபயதாரர்கள் மூலமாக இராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களும் சன்னதிகளும் புதுப்பிக்கப்பட்டு கருங்கல் தரைதளம் அமைத்து அழகு மிளிர, கோயில் புதுப்பிக்கப்பட்டது.

பின்னர், எண்மருந்து சாற்றி குடமுழுக்கு விழாவானது நேற்று காலை 7.30 மணிக்குமேல் 8.30 மணிக்குள்ளாக கலசங்களுக்கு சிவாச்சாரிகள் புனித நீரினை ஊற்ற மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பக்தர்கள் பங்கேற்ற சாமி தரிசனம் செய்து சென்றனர்.

The post சிங்கப்பெருமாள் கோவிலில் நரசிம்ம பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : Narasimha Perumal temple ,Singhapperumal temple ,Chengalpattu ,Singaperumal temple ,Padalathiri Naramma Perumal temple ,Rajagopuram ,Singapperumal Temple ,
× RELATED ஒரு பீர்பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.20 ;...