×

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு

திருவள்ளூர்: எஸ்.ஏ. கல்லூரியில் அரசியலமைப்பு சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதில், மாணவர்கள் பங்கேற்று உறுதிமொழி ஏற்று கொண்டனர். ஆவடி – பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள திருவேற்காடு, எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு ‘ஜனநாயகத்தை வழிநடத்தும் அரசியலமைப்பு திசைகாட்டி’ என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக ஒற்றுமை மற்றும் ஜனநாயக விழுமியங்களை உணர்த்தும் விதமாக பேரணியும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, ஜனநாயக உறுதி மொழியை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்கள் வழக்கறிஞர் கார்த்திக் அரசியலமைப்பு உரிமைகள் பற்றியும், நம்மல கிருஷ்ணா ஜனநாயக செயல்பாட்டில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றியும், ஜனநாயகத்தின் சமூகவியல் பரிமாணம் பற்றியும் விளக்கி பேசினார். மேலும், ஜனநாயகம் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டியும் நடைபெற்றது.

The post எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு appeared first on Dinakaran.

Tags : SA Special ,College of Arts and Sciences ,Tiruvallur ,Thiruvekadu, S.A. ,Avadi – Poontamalli Highway ,SA ,Arts and Science College ,Dinakaran ,
× RELATED அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும்...