×

விஸ்வகர்மா திட்டத்தை திமுக நிராகரிக்கிறது: கனிமொழி எம்பி பேட்டி


சென்னை: விஸ்வகர்மா திட்டத்தை திமுக நிராகரிக்கிறது என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். திமுக எம்.பி. கனிமொழி டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: திமுக விஸ்வகர்மா திட்டத்தை முழுமையாக நிராகரித்து விட்டது. தமிழ்நாட்டின் முதல்வர், திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் விஸ்வகர்மா திட்டத்தை திமுக தீவிரமாக எதிர்ப்பதன் காரணத்தை ஏற்கனவே மிகத் தெளிவாக கூறியுள்ளார்.

எனது நிலைப்பாடும் அதுதான். சாதி அமைப்பையும், பெற்றோர்களின் தொழிலையே குழந்தைகள் ஏற்க வேண்டும் எனும் குலத்தொழில்முறையையும் அத்திட்டம் இங்கு மீண்டும் கொண்டு வருகிறது. அதை நாங்கள் ஏற்கமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post விஸ்வகர்மா திட்டத்தை திமுக நிராகரிக்கிறது: கனிமொழி எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK ,Vishwakarma ,Kanimozhi ,Chennai ,Delhi ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,
× RELATED மாநில உரிமைகளை பறிப்பதுதான் பாஜவின்...