- பாஜக
- கனிமொழி எம்.பி.
- சாடல்
- சென்னை
- கனிமொழி
- திமுக
- பிரதி பொது செயலாளர்
- திமுக செயற்குழு
- கனிமொழி எம்பி சாடல்
சென்னை: மாநில உரிமைகளை பறிப்பதுதான் பாஜவின் நோக்கமாக இருக்கிறது என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். திமுக செயற்குழுவில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி பேசியதாவது: மாநில உரிமைகளை பறிப்பதுதான் பாஜவின் நோக்கமாக இருக்கிறது. மாநில உரிமைகளை மட்டும் பேசிய நிலை மாறி நாட்டுக்கே வழிகாட்டும் இயக்கமாக திமுக மாறியிருக்கிறது.
தமிழ்நாட்டில் சார்பு பதவி (pro incumbency) நிலை நிலவுகிறது. 50 சதவீதம் வாக்குகள் திமுக கூட்டணிக்கு கிடைக்கும். மகளிர் வாக்குகளை முழுமையாக கவரும்படி மகளிரணி பணிகளைத் தொடங்கிட வேண்டும். வீடு வீடாகச் சென்று சாதனைகளை எடுத்துச் சொல்லும் பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். பெண் வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துவரும் பணி வரை திமுக மகளிர் செய்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
The post மாநில உரிமைகளை பறிப்பதுதான் பாஜவின் நோக்கமாக இருக்கிறது: கனிமொழி எம்பி சாடல் appeared first on Dinakaran.