×

குரூப் 4 பணியிட கலந்தாய்வு வரும் ஜனவரியில் நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி தகவல்


சென்னை: தமிழ்நாட்டில் அரசு துறைகளில் பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து தேர்வு முடிவு அக்டோபர் 28ம் தேதி வெளியானது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்படுவோரின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

சான்றிதழ்களை சமர்ப்பித்தவர்கள் அளித்த விவரத்தின் அடிப்படையில் அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த பணிகள் முடிந்த பின்னர் ஜனவரி மாதம் கலந்தாய்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post குரூப் 4 பணியிட கலந்தாய்வு வரும் ஜனவரியில் நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Group 4 ,TNPSC ,CHENNAI ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED குரூப் 4 பதவிக்கு சரியான சான்றிதழை...