- காதர் மொகிதீன்
- சென்னை
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய
- ஜனாதிபதி
- கிமீ
- காதர் மொஹிதீன்
- பாஜக அரசு
- ஜெகதாம்பிகா பாலின்
- தின மலர்
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பாஜ அரசு, வக்பு சட்டத்திருத்த மசோதாவை வெளியிட்டு அதுபற்றி ஆய்வு செய்வதற்காக ஜெகதாம்பிகா பாலின் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைத்தது. இந்த கூட்டுக்குழுவினரின் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படுவதோடு, இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் ஏகோபித்த பிரதிநிதி சபைகளாக உள்ளவைகளின் சார்பில் அறிஞர் குழுவையும் ஒன்றிய அரசு தனது ஆலோசனைக் குழுவாகக் கொண்டு அவர்களின் கருத்துகளையும் சேர்த்து திருத்தச் சட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்.
இக்குழுவில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வக்பு சட்ட அறிஞர் ரஹ்மான்கான், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத் தலைவர், ஜமீஅத்துல் உலமா யே ஹிந்த் அகில இந்திய தலைவர் ஆகியோர் இடம்பெற்றிட வேண்டும்.
The post வக்பு சட்டத்திருத்த மசோதா பிரச்னை; முஸ்லிம் அறிஞர்கள் இடம்பெறும் சிறப்பு ஆலோசனை குழுவை அமைக்க வேண்டும்: காதர் மொகிதீன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.