×

பாஜ அரசை கண்டித்து மாநில தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்: காதர் மொகிதீன் அறிவிப்பு

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தேசத்தில் பாஜ கட்சியினரும், அவர்களின் ஆட்சியாளர்களும், ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் அமர்ந்து கொண்டு தாம் நினைக்கும் அனைத்து அதிமிதிகளையும் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தற்போது அஜ்மீர் காஜா முயுனுத்தீன் சிஷ்தி தர்கா அனைத்து சமுதாயத்தவரும் ஆன்மீக நலம் நாடி, தேடி, பண்பாடி, கூட்டங் கூட்டமாக ஓடிவந்து சேரும் உள்ளம் கவர்ந்த தியானக் கூடம். அதைத் தோண்டி ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. சம்பல் ஷாஹி ஜும்ஆ மஸ்ஜிதை தோண்டுவதையும், அதனை ஒட்டி ஏற்பட்ட கலவரம் பற்றியும், சமுதாய மக்கள் படுகின்ற அவதிகள் குறித்தும் நேரில் சென்று ஆய்வு நடத்தப்பட்டது. நாட்டில் நடக்கும் கொடுமைகளை இனியும் பொறுத்துப் பார்த்துக் கொண்டிருக்க முஸ்லிம் சமுதாயத்தால் முடியாது என்பது வெளிப்பட்டுவிட்டது! இந்த ஜனநாயக விரோதத்தைக் கண்டித்து விரைவில் எல்லா மாநில தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியாக வேண்டும்.

The post பாஜ அரசை கண்டித்து மாநில தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்: காதர் மொகிதீன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Bahia government ,Qadar Mogidin ,Chennai ,Indian Union Muslim League National ,President ,K. M. Qadar Mogidin ,Union ,Bajaj Government ,Dinakaran ,
× RELATED சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி...