×

இரண்டு ஸ்டார்கள் சந்தித்ததனால் பயந்து விட்டார்கள் ரஜினி திரையுலக சூப்பர் ஸ்டார் நான் அரசியல் சூப்பர் ஸ்டார்: சீமான் கலகல…

சென்னை: நானும் ரஜினியும் ஒருமுறை மட்டுமே சந்தித்தோம். அவர் திரையுலக சூப்பர் ஸ்டார், நான் அரசியல் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டார்களும் சந்தித்ததனால் பயந்து விட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. அப்போது, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: பாஜ மனித குல பகைவன், காவியை போட்டு என்னை சங்கியாக்க பார்க்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த்தும், நானும் 2.15 மணி நேரம் என்ன பேசினோம் என்று எங்களுக்கு மட்டுமே தெரியும். எங்களை சுற்றி நின்ற சில போராளிகளுக்கு தெரியும், சில நெருக்கமான தளபதிகளுக்கு தெரியும், அந்த தளபதிகள் பேச முடியாத சூழ்நிலை, சிலர் இல்லை. அதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை.

நாங்கள் இருவரும் பேசியதில் சங்கி ஆகிவிட்டோம். நானும் அவரும் ஒருமுறை மட்டுமே சந்தித்தோம். அவர் திரையுலக சூப்பர் ஸ்டார், நாம் அரசியல் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டார்களும் சந்தித்ததனால் பயந்து விட்டார்கள். என்னை பற்றி எழுத என்ன இருக்கிறது. எழுது, நான் பல லட்சக்கணக்கான யூனிட் ரத்தம் கொடுத்து இருக்கிறேன், பல லட்சக்கணக்கான மரக்கன்றுகள் கொடுத்து இருக்கேன். நான் இல்லையென்றால் 8 வழிச்சாலை வந்திருக்கும், நான் இல்லை என்றால் காட்டுப்பள்ளியில் துறைமுகம் கட்டிவிடுவார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.

The post இரண்டு ஸ்டார்கள் சந்தித்ததனால் பயந்து விட்டார்கள் ரஜினி திரையுலக சூப்பர் ஸ்டார் நான் அரசியல் சூப்பர் ஸ்டார்: சீமான் கலகல… appeared first on Dinakaran.

Tags : Rajini ,Seaman ,Chennai ,Saman ,CHENGALPATTU DISTRICT ,MADURANTHAKH ,Seaman Kagala ,
× RELATED ரஜினியுடன் மீண்டும் இணைந்து பணியாற்றவிருப்பம்: இசையமைப்பாளர் தேவா