×

போக்குவரத்து பிரிவில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலரை நேரில் அழைத்து பாராட்டினார் சென்னை காவல் ஆணையாளர்

சென்னை: சென்னை பெருநகர காவல், F-2 எழும்பூர் போக்குவரத்து காவல் நிலையத்தைச் சேர்ந்த M.செந்தில்குமார் (கா.எண்.55589) என்பவர் அண்ணாசாலை, ஜெமினி மேம்பாலம் கீழ், அண்ணா ரோட்டரி பாயிண்ட்டில் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

காவலர் செந்தில் குமார் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியிலிருக்கும் போது போக்குவரத்து சைகைள் மற்றும் இரவு நேரங்களில் பேட்டர்ன் லைட்களை வைத்து சிறப்பாக பணிபுரிந்து பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். மேலும் போக்குவரத்து காவலரின் பணியை வாகன ஓட்டிகள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், போக்குவரத்து பிரிவில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலர் திரு.செந்தில்குமார் என்பவரை இன்று 28.11.2024ம் தேதி நேரில் அழைத்து வெகுவாக பாராட்டி, வெகுமதி வழங்கினார்.

The post போக்குவரத்து பிரிவில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலரை நேரில் அழைத்து பாராட்டினார் சென்னை காவல் ஆணையாளர் appeared first on Dinakaran.

Tags : Police Commissioner ,Chennai ,Chennai Metropolitan Police ,F-2 Ramumbur Traffic ,Station ,Sendilkumar ,Annasalai ,Gemini Development ,Anna Rotary Point ,Guard ,Sentil Kumar ,Dinakaran ,
× RELATED பொதுமக்களின் மனுக்களை பெற்று...