×

பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு காவல் ஆணையாளர் உத்தரவு

சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர் முகாமில் பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் தினசரி நடைபெற்று வரும் பொதுமக்கள் குறை தீர் முகாமில், காவல் அதிகாரிகள் பொதுமக்களின் புகார் மனுக்களை பெற்று விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் இன்று (11.12.2024) காவல் ஆணையரகத்தில் பொதுமக்களிடம் 25 புகார் மனுக்களை பெற்று, விரைந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வின்போது, காவல் இணை ஆணையாளர் (தலைமையிடம்) A.கயல்விழி, துணை ஆணையாளர் (தலைமையிடம்) .S.மேகலினா ஐடன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post பொதுமக்களின் மனுக்களை பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு காவல் ஆணையாளர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chennai Metropolitan Police ,Commissioner ,Chennai Metropolitan ,Police Commissioner ,Arun Uttara ,
× RELATED மனநல பாதித்தவர்களை கையாளும் திறன்...