×

நாதக நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் வினோத்குமார் உட்பட 50 பேர், அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகல்!

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் விலகுவதாக அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் வினோத்குமார் தலைமையில் விவசாய அணி, இளைஞர் பாசறை மற்றும் மோகனூர் நகர செயலாளர், மகளிர் பாசறை செயலாளர் உள்ளிட்ட 50 பேர் கட்சியின் கொள்கை முரண்பாடு காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளரும் வழக்கறிஞருமான வினோத்குமார் நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது; கடந்த 2010ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தேன். கட்சி நடத்திய பல்வேறு கூட்டங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். இதற்காக பணம் செலவழித்து கூட்டங்களை கூட்டினோம். கட்சிக்காகப் பல லட்சங்களைச் செலவு செய்துள்ளோம். ஆனால், நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. கட்சிக் கொள்கைக்கு எதிராகவும், மதவாதத்தை ஆதரித்தும் சீமான் பேசிவருகிறார்.

நாம் தமிழர் கட்சியின் முக்கிய நோக்கமே மதச்சார்பின்மை தான். தற்போது சீமான் மதவாதத்தை ஆதரிக்கும் போக்கில் பேசி வருகிறார். இது பொது மக்கள் மத்தியில் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. சீமானை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. இதனால் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம். எனவே அக்கட்சியில் இருந்து விலக முடிவு எடுத்து உள்ளோம் என்று கூறியுள்ளார்.

 

The post நாதக நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் வினோத்குமார் உட்பட 50 பேர், அக்கட்சியில் இருந்து கூண்டோடு விலகல்! appeared first on Dinakaran.

Tags : Vinothkumar ,Nadaka Namakkal district ,Akkatsi ,NAMAKKAL ,NAMAKKAL DISTRICT ,Namakkal District Nam Tamil Party ,District Secretary ,Agriculture ,Youth Pasar ,Mohanur City ,Women's Pasar ,Nataka Namakkal district ,Vinodkumar ,Dinakaran ,
× RELATED நடுக்கடலில் மீன் பிடித்தபோது...