×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவு..!!

மும்பை: உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் திடீரென 1.4%க்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,039 புள்ளிகள் சரிந்து 79,195 புள்ளிகளுக்கு சென்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 310 புள்ளிகள் சரிந்து 23,964 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. எஸ்பிஐ லைஃப், எச்டிஎஃப்சி லைஃப், இன்ஃபோசிஸ், எம்&எம் உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களில் 45 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின்றன.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,000 புள்ளிகளுக்கு மேல் சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai ,INDEX ,Mumbai Stock ,Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,343 புள்ளிகள் சரிவு..!!