×

திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பால் உற்பத்தியில் புதிய வரலாறு படைக்கும் தமிழ்நாடு: அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பால் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய வரலாறு படைக்கும் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பால் உற்பத்தியில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழ்நாடு ஒவ்வொரு ஆண்டும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. 2017 முதல் 2020 வரை முறையே 7.742, 8.362, 8.759 மில்லியன் டன்களாக தமிழ்நாட்டின் பால் உற்பத்தி இருந்தது. 2021 முதல் 2023-ம் ஆண்டுகளில் முறையே 9.790, 10107, 10.317 மில்லியன் டன்களாக பால் உற்பத்தி உயர்ந்துள்ளது என தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

The post திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பால் உற்பத்தியில் புதிய வரலாறு படைக்கும் தமிழ்நாடு: அமைச்சர் ராஜகண்ணப்பன் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Dravitha Model Government ,Minister ,Rajkanapan ,Chennai ,Rajakanapan ,
× RELATED சமத்துவச் சமுதாயம் அமைத்தே தீருவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்