×

குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக சார்பில் துணை முதல்வருக்கு வரவேற்பு

வடலூர் : கடலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். இந்நிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் ஆலோசனையின் பேரில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் 5000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கடலூர் மஞ்சக்குப்பம் மாவட்ட ஆட்சியர் முகாம் அருகில் குறிஞ்சிப்பாடி தொகுதி குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியம், குறிஞ்சிப்பாடி வடக்கு ஒன்றியம், வடலூர் நகரம், குறிஞ்சிப்பாடி பேரூர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், வடலூர் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் சுப்புராயலு, குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், துணை தலைவர் ராமர், நகர செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக சார்பில் துணை முதல்வருக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Deputy ,Chief Minister ,Karthanjipadi Constituency ,Dimuka Vadalur ,Tamil Nadu ,Dimuka Youth Team ,Udayaniti Stalin ,Cuddalore district ,Minister ,Agriculture ,Peasant ,Welfare ,Cuddalore East District ,Keranjipadi Constituency Dimuka ,
× RELATED 2026 தேர்தலில் வெற்றி நமக்கே திமுகவுக்கு...