×

பணிகளை புறக்கணித்து வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில், பணிகளை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் தமிழரசன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சேகர், மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் ஆனந்த பூபாலன், வளனரசு, அசோக்குமார், புஷ்பவனம் மற்றும் வட்டக்கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

3ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களை உனடியாக நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பு 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள பணியிடங்களை கலைக்கும் நடவடிக்கைகளை முற்றிலும் கைவிட வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்கிட வேண்டும்.

2 ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியல், நடப்பாண்டிற்கான மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை விரைந்து வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.தேவகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில்சங்க நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஏராளமானோர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

The post பணிகளை புறக்கணித்து வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Tamil Nadu Revenue Officers' Association ,Sivagangai Collector ,State Secretary ,Tamilarasan ,Shekhar ,District Secretary ,Krishnakumar ,Revenue Department ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனைக்கு மருத்துவர் நியமனம் கோரி கலெக்டரிடம் மனு