×

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விடுவிக்கக் கோரி பேரணி :மோதலில் 6 பேர் உயிரிழப்பு; இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு அமல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு கடந்த 13ம் தேதி அவர் அழைப்பு விடுத்திருந்தார்.பொதுமக்களை காரணமின்றி கைது செய்தல், 26வது சட்டத்திருத்தம் நிறைவேற்றம் உள்ளிட்டவற்றை கண்டித்து இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து இம்ரானின் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி சார்பில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் எதிரொலியாக ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனிடையே சிறையில் உள்ள இம்ரான் கானை விடுவிக்கக் கோரி கட்சி தொண்டர்கள் இஸ்லாமாபாத் நோக்கி பேரணி சென்றனர். இதையடுத்து நகருக்குள் செல்லும் பாதையை பெரிய கண்டெய்னர்களை வைத்து அடைத்ததுடன் நகரை சுற்றி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தடைகளை மீறி போராட்டக்காரர்கள் நகரை நோக்கி முன்னேறியதால் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாருக்கும், இம்ரான்கான் கட்சியினருக்கும் மோதல் வெடித்தது. பல போலீசார் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயம் அடைந்தனர். அதே சமயம் போலீசார் தாக்கியதில் 3500 தொண்டர்கள் காயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

The post பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை விடுவிக்கக் கோரி பேரணி :மோதலில் 6 பேர் உயிரிழப்பு; இஸ்லாமாபாத்தில் ஊரடங்கு அமல் appeared first on Dinakaran.

Tags : Imrankan ,Islamabad ,Pakistan ,Imran Khan ,Dinakaran ,
× RELATED எல்லையில் நீடிக்கும் பதற்றம்.....