×

தலிபன்களை குறி வைத்து ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் வான்வழி தாக்குதல்: 46 பேர் பலி

பெஷாவர்: பாகிஸ்தான் தலிபன்கள் என அழைக்கப்படும் தெஹ்ரிக்-இ-தலிபன் என்ற தீவிரவாத அமைப்பினர் கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபன்கள் ஆதரவு தருவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபன் மறைவிடங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணம் பர்மால் மாவட்டம் மீது பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் நேற்று முன்தினம் இரவு குண்டு மழை பொழிந்தன. லாமன் உள்பட ஏழு கிராமங்களில் தலிபன் இருப்பிடங்களை குறி வைத்து ஒரேநேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அப்பாவி குழந்தைகள், பெண்கள் உள்பட 46 பேர் கொல்லப்பட்டதாக தலிபன் அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதல்கள் குறித்து பாகிஸ்தான் எந்த தகவலும் வௌியிடவில்லை.

The post தலிபன்களை குறி வைத்து ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் வான்வழி தாக்குதல்: 46 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Taliban ,Peshawar ,Tehrik-e-Taliban ,Afghanistan ,Dinakaran ,
× RELATED எல்லையில் நீடிக்கும் பதற்றம்.....