×
Saravana Stores

வடசென்னை அனல்மின் திட்டம் நிலை-3ல் இருந்து டிசம்பர் மாத இறுதிக்குள் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவு


சென்னை: வடசென்னை அனல் மின் திட்டம் நிலை 3ல் இருந்து டிசம்பர் இறுதிக்குள் முழுமையான மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார். வடசென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை-3, கடந்த ஜூன் 7ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது, சோதனை இயக்கத்திற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பொருளாதார ரீதியான மின் உற்பத்தி பணிகளை துரிதமாக முடித்து, வருகிற டிசம்பர் மாத இறுதிக்குள் முழுமையான மின் உற்பத்தியை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் நந்தகுமார், இயக்குனர் (திட்டம்) கருக்குவேல் ராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post வடசென்னை அனல்மின் திட்டம் நிலை-3ல் இருந்து டிசம்பர் மாத இறுதிக்குள் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : North Chennai ,Minister ,Senthilbalaji ,CHENNAI ,Senthil Balaji ,
× RELATED அரசியலமைப்பு தின பவள விழா: கட்சி தலைவர்கள் வாழ்த்து