×

பெருந்துறையில் திமுக சார்பில் சிலம்பம் போட்டி

 

ஈரோடு, நவ.27: ஈரோடு மாவட்டம் பெருந்துறை மேட்டுப்புதூர் சமுதாய கூடத்தில் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிலம்பம் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவுக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன் பங்கேற்று, வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் சின்னச்சாமி, சுப்பிரமணி, நிர்வாகிகள் நித்திக்குமார், துர்கா தேவி, குருசாமி, கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் தூயமணி, செல்வராஜ், தங்கராஜ், சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் லாரன்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பெருந்துறையில் திமுக சார்பில் சிலம்பம் போட்டி appeared first on Dinakaran.

Tags : Silambam ,DMK ,Perundurai ,Erode ,Tamil Nadu ,Deputy ,Chief Minister ,Youth Secretary ,Udhayanidhi Stal ,Perundurai Mettupudur Community Hall ,Erode District ,Southern Union DMK ,Dinakaran ,
× RELATED திமுக அரசு மீது வி.சி.க.வுக்கு அதிருப்தி ஏதும் இல்லை : திருமாவளவன்