×

4 மாநிலங்களில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு டிச.20ம் தேதி இடைத்தேர்தல்


புதுடெல்லி: நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர்சிபி எம்பிக்கள் பீதா மஸ்தான் ராவ் யாதவ், ரியாகா கிருஷ்ணய்யா ஆகியோரது பதவிக்காலம் 2028ம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி முடிவடைய இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். இதேபோல் வெங்கடரமணா ராவ் மோபிதேவி, 2026ம் ஆண்டு வரை பதவிக்காலம் உள்ளநிலையில் தனது பதவியை முன்கூட்டியே ராஜினாமா செய்தார். இதன் காரணமாக மூன்று தொகுதிகள் காலியாகின.

இதேபோல் ஒடிசாவில் பிஜூ ஜனதா தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சுஜீத் குமார் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவத்தை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான ஜவஹர் சிர்கார் ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்தார். அரியானா சட்டமன்ற தேர்தலில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து பாஜவின் கிரிஷன் லால் பன்வார் தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் 4 மாநிலங்களிலும் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு வருகிற டிசம்பர் மாதம் 20ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தள்ளது.

The post 4 மாநிலங்களில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு டிச.20ம் தேதி இடைத்தேர்தல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Election Commission ,AP ,YSRCP ,Bita Mastan Rao Yadav ,Riaga Krishnaiya ,
× RELATED மின்னணு ஆவண விதியில் திருத்தம்...