×

திருத்தணியில் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்: காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

திருத்தணி: திருத்தணியில் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பழைய தாசில்தார் அலுவலகம் அருகில் சார் பதிவாளர் அலுவலகம் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அக்கட்டிடம் அகற்றப்பட்டு, ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. நேற்று அதன் திறப்பு விழா நடைபெற்றது. புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடத்தை, சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, புதிய சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் சா.மு.நாசர், குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அப்போது, பத்திரப்பதிவு செய்ய சார் பதிவாளர் அலுவலகம் வருகை தரும் பார்வையாளர் வசதிக்காக 3249 சதுர அடி பரப்பளவில் 2 அடுக்கு கொண்ட புதிய கட்டிடத்தில் சார்பதிவாளர் மேடை, பார்வையாளர் காத்திருப்பு அறை, பதிவேடுகள் பாதுகாப்பு அறை, கணினி அறை, கழிப்பிட வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் கலெக்டர் டாக்டர் த.பிரபுசங்கர், திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன், நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி, துணை பதிவுத்துறை தலைவர் சாமிநாதன், நகர மன்ற துணை தலைவர் ஆ.சாமிராஜ், மாவட்ட பதிவாளர் பாவேந்தன், திருத்தணி சார் பதிவாளர் சுகன்யா, நகர திமுக செயலாளர் வி.வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post திருத்தணியில் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்: காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Chief Minister ,Thiruthani ,M.K.Stalin ,Tiruvallur District ,Tiruthani Old Tahsildar Office ,New Sub Registrar Office ,
× RELATED திருத்தணியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்