×

கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் நுழைவுவாயில் திறப்பு

சென்னை: கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் நுழைவுவாயில் திறக்கப்பட்டுள்ளது. கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மின்தூக்கி மற்றும் நகரும் படிக்கட்டுகள் போன்ற வசதிகளுடன் கூடுதல் நுழைவுவாயில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவு வாயிலை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் (அமைப்புகள் மற்றும் இயக்கம்), ராஜேஷ் சதுர்வேதி நேற்று(25.11.2024) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். இந்த நுழைவுவாயில் நேற்று(25.11.2024) முதல் பயணிகளின் பயன்பாட்டிற்கு வந்தது.

The post கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் நுழைவுவாயில் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kindi Metro Train Station ,Chennai ,Kindi Metro Railway Station ,Dinakaran ,
× RELATED காதலனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை...