- சாய் பல்லவி
- சென்னை
- கோயம்புத்தூர்
- சாய் பல்லவி
- விக்னேஷ் சங்கரன்
- விசுப் பாய்ரே
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
![]()
சென்னை: கோவையில் இருக்கும் கல்லூரியில் படித்தபோது சக மாணவரான விக்னேஷ் சங்கரன் இயக்கிய காட்சிப் பிழை என்கிற குறும்படத்தில் நடித்தார் சாய் பல்லவி. அப்போது தான் அவர் கேமராவுக்கு முன்பு முதல் முறையாக தோன்றினார். அந்த சமயத்தில், டான்ஸ் ஆடுவதில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வந்தார். பிறகு சினிமாவில் நடிக்க சாய் பல்லவி முயற்சி செய்திருக்கிறார். அப்போது ஒரு ஆடிஷனில் நடந்த மோசமான விஷயத்திற்கு பிறகு நடிகையாக விரும்பவில்லை என சாய் பல்லவி கூறியதாக விக்னேஷ் சங்கரன் தெரிவித்திருக்கிறார்.
பட வாய்ப்பை எதிர்பார்த்து ஆடிஷனுக்கு சென்ற இடத்தில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்ததாக பிரபல நடிகைகளே தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சாய் பல்லவி எந்த வகையில் பாதிக்கப்பட்டார் என தெரியவில்லை. ஆனால் அதன் பிறகு நடிக்க விருப்பம் இல்லாமல் இருந்தார். ஆனால் வாழ்க்கை அவரை மீண்டும் நடிகை ஆக்கிவிட்டது என சாய் பல்லவின் நண்பர் ஒருவர் கூறியுள்ளார். நல்லவேளை மோசமான விஷயங்களை கடந்து வந்து, அதையெல்லாம் புறம் தள்ளி அவர் நடிகையாகிவிட்டார் என ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.
The post ஆடிஷனில் மோசமான அனுபவம் நடிகையாக விரும்பாத சாய்பல்லவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.
