×

சீர்காழி காவல் நிலையத்தில் தஞ்சை சரக டிஐஜி ஆய்வு

 

சீர்காழி, நவ.25: சீர்காழி காவல் நிலையத்தில் தஞ்சை சரக டிஐஜி ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு அமலாக்க பிரிவு, போக்குவரத்து காவல் நிலையங்களில் தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் நேற்று ஆய்வு செய்தார். அப்போது காவல் நிலையத்தில் வழக்கு விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை பார்வையிட்டார்.

மேலும் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை கோப்புகளை பார்வையிட்டு போலீசாரிடம் விசாரித்தார்.பின்னர் சீர்காழி டிஎஸ்பி அலுவலகத்துக்கு சென்று பதிவேடுகளை பார்வையிட்டதுடன் டிஎஸ்பி ராஜ்குமாரிடம் ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது சீர்காழி இன்ஸ்பெக்டர் செல்வி, கொள்ளிடம் இன்ஸ்பெக்டர் ராஜா, எஸ்ஐ காயத்ரி மற்றும் திருவெண்காடு, புதுப்பட்டினம், பூம்புகார் இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.

The post சீர்காழி காவல் நிலையத்தில் தஞ்சை சரக டிஐஜி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thanjavur Cargo ,Sirkazhi Police Station ,Sirkazhi ,police station ,Mayiladuthurai District ,All Women Police Station ,Prohibition Enforcement Division ,Tanjore Cargo DIG ,Jiaul ,Tanjore Cargo ,Dinakaran ,
× RELATED சீர்காழி அருகே நடந்த மாநில அளவிலான...