×

லைப் ஜாக்கெட் இல்லாமல் சவாரி ஒப்பந்ததாரர், பரிசல் ஓட்டி கைது

தர்மபுரி, நவ.26: தர்மபுரி, ஏரியூர் அருகே ஒட்டனூர்-கோட்டையூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு தினந்தோறும் பரிசல் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பரிசல் துறையில் நாகமலை விஏஓ வினோத்குமார் தலைமையிலான வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது 20க்கும் மேற்பட்டவர்கள் பரிசல் மூலம் பயணம் செய்தனர். அவர்கள் உரிய பாதுகாப்பு கவசம் (லைப் ஜாக்கெட்) அணியாமல் அஜாக்கிரதையாக பயணம் மேற்கொண்டனர். இதுகுறித்து விஏஓ வினோத்குமார் ஏரியூர் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் மேட்டூர் வெடிக்காரனூரை சேர்ந்த ஒப்பந்ததாரர் ராஜேந்திரன் (58), நாகமலை கருங்காலியை சேர்ந்த பரிசல் ஓட்டுநர் ராம்குமார் (40) ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

The post லைப் ஜாக்கெட் இல்லாமல் சவாரி ஒப்பந்ததாரர், பரிசல் ஓட்டி கைது appeared first on Dinakaran.

Tags : Ride ,Dharmapuri ,Parisal ,Dharmapuri district ,Salem district ,Cauvery river ,Ottanoor-Kottaiyur ,Dharmapuri, Ariyur ,Nagamalai ,VAO Vinodkumar ,Dinakaran ,
× RELATED தர்மபுரி நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்