×

திருச்செங்கோட்டில் கேஎஸ்ஆர் பார்மசி கல்லூரி தொடக்க விழா

 

திருச்செங்கோடு, நவ.26: திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி குழுமத்தில், புதிய கல்லூரியாக கேஎஸ்.ரங்கசாமி பார்மசி கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரியை, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.நாராயணசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவிற்கு கல்லூரியின் தலைவர் சீனிவாசன், துணை தலைவர் சச்சின் ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவில், கல்வி நிறுவனங்களை நிர்வாக இயக்குனர் மோகன், பார்மசி கல்லூரியின் முதல்வர் ரத்தினவேல், கேஎஸ்ஆர் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். சரத்அசோகன், கேஎஸ்ஆர் செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர்.உத்ராமணி, கேஎஸ்ஆர் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் முதல்வர் டாக்டர்.ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களை சேர்ந்த அனைத்து கல்லூரி முதல்வர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post திருச்செங்கோட்டில் கேஎஸ்ஆர் பார்மசி கல்லூரி தொடக்க விழா appeared first on Dinakaran.

Tags : KSR College of Pharmacy ,Tiruchengode ,KS Rangasamy College of Pharmacy ,KSR Education Group ,Dr. ,Narayanasamy ,Tamilnadu ,MGR Medical University ,Srinivasan ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது