×

டயாலிசிஸ் இயந்திரம் கையாளுதல்: ஐகோர்ட் கிளை அதிருப்தி

மதுரை: அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் இயந்திரங்கள் கையாளுவது தொடர்பாக ஐகோர்ட் கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது. 688 டையாலிசிஸ் இயந்திரங்களை 150 தற்காலிக பணியாளர்கள், மாணவர்கள் கையாளுகின்றனர். பயிற்சி மாணவர்களை கொண்டு இயந்திரங்களை கையாள்வது துரதிஷ்டவசமானது. டையாலிசிஸ் பிரிவில் போர்க்கால அடிப்படையில் நிரந்தர பணியாளர்களை நிரப்புவது அவசியம். உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் போதிய, நிரந்தரமாக டயாலிசிஸ் தொழில் நுட்பனர்களை நியமிக்கக் கோரிய வழக்கு என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post டயாலிசிஸ் இயந்திரம் கையாளுதல்: ஐகோர்ட் கிளை அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,Dinakaran ,
× RELATED கட்சி கொடி மரங்களை ஏன் அகற்ற கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி