×
Saravana Stores

போதையில் கார் ஓட்டிய நடிகர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கணபதி. வினோதயாத்ரா, லாலிபாப், பகல் நட்சத்திரங்கள், இன்னத்த சிந்தாவிஷயம், ஸ்பிரிட், கம்மட்டிப்பாடம், மஞ்சும்மல் பாய்ஸ் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். இந்தநிலையில் நேற்று இரவு தனது காரில் கொச்சி அங்கமாலி-களமசேரி தேசிய நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் சென்றுள்ளார். போலீசார் அவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது நடிகர் கணபதி போதையில் அசுர வேகத்தில் கார் ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர்.

The post போதையில் கார் ஓட்டிய நடிகர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Ganpati ,National ,
× RELATED மோடி எனது இல்லத்திற்கு வந்ததில் தவறு...