×
Saravana Stores

முன்விரோத தகராறில் பயங்கரம்; அரசு பஸ் டெப்போவில் கத்தி சண்டை டிக்கெட் பரிசோதகர், வாட்ச்மேன் காயம்

மேலூர்: மேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், முன்விரோதத் தகராறில் டிக்கெட் பரிசோதகர் மற்றும் வாட்ச்மேன் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஒருவர் படுகாயம் அடைதார். மதுரை மாவட்டம், மேலூரில் அரசு போக்குவரத்துக் கழக கிளை பணிமனை உள்ளது. இங்கு வாட்ச்மேனாக பணிபுரிபவர் பூபதி (54). அதே கிளையில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிபவர் மணிகண்டன் (52). இவர்கள் இருவருக்கும் கொடுக்கல்-வாங்கல் தகராறில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு அரசு பணிமனையில் பூபதிக்கும், மணிகண்டனுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு கத்தியால் குத்திக் கொண்டனர். இதில், வாட்ச்மேன் பூபதி படுகாயம் அடைந்தார். டிக்கெட் பரிசோதகர் மணிகண்டன் லேசான காயமடைய, இருவரும் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post முன்விரோத தகராறில் பயங்கரம்; அரசு பஸ் டெப்போவில் கத்தி சண்டை டிக்கெட் பரிசோதகர், வாட்ச்மேன் காயம் appeared first on Dinakaran.

Tags : Government Bus Depot ,Maleore ,Malur State Transport Corporation ,Government Transport ,Madurai District ,Malur ,Watchman ,Dinakaran ,
× RELATED நிலக்கோட்டை அருகே அரசு பஸ்சை மறித்து ரகளை செய்த 2 பேர் கைது