×

புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது RCB

ஜெட்டா: கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடிய புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு RCB ஏலத்தில் எடுத்தது. சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த தீபக் சஹாரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.9.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இந்திய வீரர் ஆகாஷ் தீப்பை லக்னோ அணி ரூ.8 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்க வீரர் மார்க்கோ யான்சனை ரூ.7 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த இரு சீசன்களில் சிஎஸ்கேவின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்ந்த துஷார் தேஷ்பாண்டேவை ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியது. ரூ.6.25 கோடி வரை சிஎஸ்கே அணி ஏலம் கேட்ட நிலையில், இறுதியாக ரூ.6.5 கோடிக்கு துஷாரை ராஜஸ்தான் தட்டித் தூக்கியது.

The post புவனேஷ்வர் குமாரை ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது RCB appeared first on Dinakaran.

Tags : RCB ,Bhubaneshwar Kumar ,Sunrisers Hyderabad ,Deepak Sahar ,CSK ,Akash ,Dinakaran ,
× RELATED ஆர்சிபி கேப்டன் பதவிக்கு கோலியை தவிர...