×

ஆர்சிபி கேப்டன் பதவிக்கு கோலியை தவிர வேறு வழியில்லை: டிவில்லியர்ஸ் சொல்கிறார்


மும்பை: வரும் சீசனில் ஆர்சிபி கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதுபற்றி தென்ஆப்ரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் கூறியதாவது: தற்போது, ஆர்சிபி கேப்டன் பதவிக்கு தகுதியான ஒரு வீரரும் இல்லை. ஜிதேஷ் சர்மா, க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார் ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே அனுபவம் உள்ளவர்கள். ஆனால் அவர்களுக்கு கேப்டன் பதவி அனுபவம் கிடையாது.

கோலி 143 போட்டியில் ஐபிஎல் கேப்டனாக அனுபவங்களைக் கொண்டுள்ளார். எனவே, கேப்டன் பொறுப்பைகோலியிடம் ஒப்படைப்பதைத் தவிர ஆர்சிபிக்கு வேறு வழியில்லை, என தெரிவித்துள்ளார். கோலி ஏற்கனவே 9 சீசனில் ஆர்சிபி கேப்டனாக செயல்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post ஆர்சிபி கேப்டன் பதவிக்கு கோலியை தவிர வேறு வழியில்லை: டிவில்லியர்ஸ் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : RCP ,Collie ,DeVilliers ,Mumbai ,RCB ,Jidesh Sharma ,Krunal Pandya ,Bhubaneshwar Kumar ,Koli ,Dinakaran ,
× RELATED ஹால் ஆஃப் ஃபேம் கவுரவம்: டிவில்லியர்ஸ்சுக்கு கோஹ்லி வாழ்த்து