×

தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் அறிவுறுத்திய வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், வாகனங்களிலும், நம்பர் பிளேட்களிலும் தேசிய சின்னங்களை தவறாக  பயன்படுத்துவது தேசிய சின்னங்கள் பாதுகாப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம்  மற்றும் மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரியது. எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அபராதம், வழக்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, தேசிய, மாநில சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்பட்டதாக அறிக்கையில் இல்லை என்றார். இதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவலர்களிடமிருந்து இதுபோன்ற புகார்கள் வரவில்லை. அப்படி வராதபோது உயர் அதிகாரி தாமாக முன்வந்து வழக்குப்பதிய முடியாது என்றார். அப்போது, அரசு வழக்கறிஞர் ஆஜராகி, வங்கி மற்றும் காப்பீட்டு துறை ஊழியர்கள் ஒன்றிய அரசின் முத்திரையை பயன்படுத்துகின்றனர். இதற்கு தடை விதிக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதற்காகத்தான்  இதுபோன்று அரசு சின்னங்களை தவறாக பயன்படுத்துபவர்களை கான்ஸ்டபிள் கண்டறிந்தால் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறோம். கான்ஸ்டபிள்கள் தகுந்த உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தால் உடனடியாக  வழக்குப்பதியப்பட வேண்டும். கிரிமினல்களும் அரசு சின்னங்களை பயன்படுத்தி நடவடிக்கையிலிருந்து தப்பிக்கிறார்கள். அரசு, நீதித்துறை, காவல்துறை, வங்கி, காப்பீடு ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் தங்களின் தனியார்  வாகனங்களில் பயன்படுத்தினால் நடவடிக்கைக்கு உள்ளாக்க வேண்டும் என்று தெரிவித்து இந்த வழக்கில் நாளை மறுதினம் உத்தரவு பிறப்பிக்கிறேன் என்றார்.     …

The post தேசிய, மாநில சின்னங்களை தவறாக பயன்படுத்தினால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Justice ,SM Subramaniam ,Tamil Nadu government ,
× RELATED சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இன்று...