×

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது; ஒன்றிய அரசை முடக்க எதிர்கட்சிகள் வியூகம்: அவையை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்

புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்கும் நிலையில், அதானி விவகாரம், வக்பு வாரியம் உள்ளிட்ட மசோதா தொடர்பாக ஒன்றிய அரசை முடக்க எதிர்கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன. அதேநேரம் இன்று நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் அவையை சுமூகமாக நடத்த வலியுறுத்தப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின் முதன்முறையாக அரியானா, ஜம்மு – காஷ்மீர் சட்டப் பேரவை தேர்தல்கள் நடந்தன. அரியானாவில் மீண்டும் பாஜக ஆட்சியும், ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி அரசும் அமைந்தது.

தொடர்ந்து சமீபத்தில் நடந்த மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டப் பேரவை தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணியும், ஜார்கண்டில் இந்தியா கூட்டணியும் வெற்றிப் பெற்றன. இந்த இரு மாநிலங்களிலும் முதல்வர்கள் பதவியேற்கவில்லை. இந்த நிலையில், நாளை முதல் வரும் டிசம்பர் 25ம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடக்கிறது. தொடர்ந்து வரும் 26ம் தேதி 75வது அரசியலமைப்பு தின விழா நடக்கிறது. அன்றைய தினம் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டம் இருக்காது. நாடாளுமன்ற கூட்டத்தை சுமூகமாக நடத்தும் வகையில் ஒன்றிய அரசின் சார்பில், இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தின் பிரதான கூட்ட அறையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது.

பாஜக மூத்த தலைவரும், ஒன்றிய பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் தலைமையில், ஒன்றிய அமைச்சர்கள் ஜேபி நட்டா, கிரண் ரிஜ்ஜூ, எல்.முருகன் முன்னிலையில் நடந்தது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் பிரமோத் திவாரி, ஜெய்ராம் ரமேஷ், பிஜு ஜனதா தளம் எம்பி சஸ்மித் பத்ரா, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, மதிமுக எம்பி வைகோ உள்ளிட்ேடார் பங்கேற்றனர். அப்போது நாடாளுமன்ற கூட்டத்தை சுமூகமாக நடத்துவது குறித்தும், நாளை மறுநாள் நாடாளு​மன்ற கட்டிடத்​தின் (சம்​விதன் சதன்) மைய மண்டபத்​தில் கொண்​டாடப்​படும் அரசி​யலமைப்பு சட்டம் ஏற்றுக்​கொள்​ளப்​பட்ட 75வது ஆண்டு விழா குறித்தும் எதிர்கட்சிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

இந்த குளிர்கால கூட்​டத்​தொடரின் போது, தற்போது நாடாளு​மன்ற கூட்டுக் குழு​வின் விசா​ரணை​யில் உள்ள வக்பு வாரிய திருத்த மசோதாவை நிறைவேற்ற அரசு முயற்சி மேற்​கொள்​ளும் என்றும், இந்த அமர்​வின் போது, ‘ஒரே நாடு ஒரே தேர்​தல்’ மசோதாவை ஒன்றிய அரசு அறிமுகப்​படுத்​தலாம் என்றும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்​டம், வக்பு வாரிய சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வரும் நிலை​யில், பல்வேறு முக்கிய பிரச்​னைகளை இந்த கூட்டத் தொடரில் எழுப்ப எதிர்க்​கட்​சிகள் திட்​ட​மிட்​டுள்ளன. இந்த கூட்டத் தொடரில் ஐந்து புதிய மசோதாக்கள் உட்பட 15 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே நேற்று ஜார்க்​கண்ட், ம​காராஷ்டிரா ​மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ​முடிவுகள் வெளியானதால், தேர்தல் முடிவுகள் தொடர்பான விஷயங்களும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதானி குழும தலைவர் கவுதம் அதானி உள்ளிட்டோருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறபித்துள்ளதால், இவ்விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடிக்கும் என்று கூறப்படுகிறது. கவுதம் அதானியை கைது செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், நாளை தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சலசலப்புக்கு பஞ்மிருக்காது என்றே தெரிகிறது.

The post நாடாளுமன்ற கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது; ஒன்றிய அரசை முடக்க எதிர்கட்சிகள் வியூகம்: அவையை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : EU ,New Delhi ,EU government ,Adani ,Vakpu Board ,Dinakaran ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் பதிவான...