×

பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமை :திமுக எம்.பி. கனிமொழி கருத்து

சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமை என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் காதலனுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், செல்போனில் வீடியோ பதிவு செய்த நடைபாதை பிரியாணி கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து கைதான ஞானசேகரனை 15 நாள் காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது கை, கால்களில் முறிவு ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு ஞானசேகரனை சிறையில் அடைக்க போலீஸ் முடிவு செய்துள்ளது.

மேற்கண்ட இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள கனிமொழி, “சென்னை அண்ணா‌ பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது. இதே நபர் நீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும்.

பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதைப் பொறுத்துக்கொண்டு இருக்காமல், துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தருவதும், அனைத்து தளங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமை :திமுக எம்.பி. கனிமொழி கருத்து appeared first on Dinakaran.

Tags : Dimuka M. B. ,Chennai ,Dimuka MP Kanimozhi ,Chennai Anna University ,
× RELATED நாடாளுமன்றத்தில் பெண் எம்பிக்கள்...