×

தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு

மதுக்கரை: கோவை, செல்வபுரத்தில் தூய்மை பணியாளர்கள் நலவாரியம், ஊழல் எதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றின் சார்பில் ,தூய்மை பணியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஊழல் எதிர்ப்பு அமைப்பின் தலைவர் சாம் பிரகாஷ் தலைமையில் ஈஸ்வரசாமி எம்.பி. கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய மாநில துணை தலைவர் கனிமொழி பத்மநாபன், கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் சிவகுமார், தெற்கு மண்டல துணை ஆணையாளர்‌ குமரன், தாட்கோ மேலாளர் மகேஷ்வரி, தெற்கு மண்டல சுகாதார அதிகாரி ஆண்டியப்பன், பகுதி செயலாளர் கேபிள் மணிகண்டன், பேரூர் பேரூராட்சி தலைவர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்‌ ராஜ்குமார், வார்டு செயலாளர் ராஜேஷ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

The post தூய்மை பணியாளர்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Madhukarai ,Selvapuram, Coimbatore ,Sanitation Workers Welfare Board ,Anti-Corruption Organization ,Easwarasamy ,Sam Prakash ,Coimbatore ,Mayor ,Ranganayake, Tamil Nadu ,
× RELATED வேன்-கார் மோதல் 2 மாத பேரனுடன் தாத்தா, பாட்டி பலி