- அமைச்சர்
- சாமிநாதன்
- தஞ்சாவூர்
- 2024
- அகில இந்திய தமிழ் சங்கம்
- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
- கரிகாலசோழன் கலைக்கூடம்
தஞ்சாவூர்: தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இனி பணி வழங்கப்படும் என்று தஞ்சாவூரில் அமைச்சர் சாமிநாதன் கூறினார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், கரிகாலசோழன் கலையரங்கத்தில் அனைத்திந்திய தமிழ்ச்சங்கப் பேரவை மற்றும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தமிழ்க்கூடல் 2024 மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்பு அமைச்சர் சுவாமிநாதன் அளித்த பேட்டி: தமிழுக்காக உயிர் நீத்தவர்கள், உடைமைகளை தந்த தியாகிகள், சான்றோர்கள் அனைவருக்கும் மரியாதை செய்யக்கூடிய வகையில் ஜனவரி 25ம் நாளில் அரசு விழா எடுக்க வேண்டும் என முதல்வர் அறிவித்து உள்ளார். அன்றைய நாளை தமிழ் மொழி தியாகிகள் தினமாக கடைப்பிடிக்க இருக்கிறோம். வரும் ஜனவரி முதல் இது கடைபிடிக்கப்படும். அதேபோல் விருதுகளும் வழங்கப்பட உள்ளது. தற்போது பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. உதவி இயக்குநர் என்று மாவட்ட அளவில் அதிகாரிகள் இருக்கிறார்கள்.
அவர்கள் எல்லோரும் வரும் காலங்களில் இளங்கலை தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் மூலம் அதற்குரிய தேர்வுகளை செய்ய வேண்டும் என கோரினர். முதல் கட்டமாக இந்த ஆண்டு தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணிகள் வழங்கப்பட இருக்கிறது. தஞ்சையில் சோழர் அருங்காட்சியகத்திற்கான மாதிரி படங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரும் வடிவத்தை தேர்வு செய்து வந்துள்ளார்கள். அதற்குரிய திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு விரைவில் ஒப்பந்த புள்ளி கோரி பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடை நீக்கம் தொடர்பாக நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, ‘சஸ்பெண்ட் செய்யப்பட்ட காரணத்திற்கான ஆதாரம் இல்லை. இது தொடர்பாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அது குறித்து நான் கூறுவது தவறு. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு முடிவு வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
The post தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை: அமைச்சர் சாமிநாதன் பேட்டி appeared first on Dinakaran.