×
Saravana Stores

தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் நண்பகல் 1 மணிக்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

10 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு 630 கிமீ தெற்கு – தென் கிழக்கிலும், திரிகோணமலைக்கு 340 கிமீ தெற்கு – தென் கிழக்கிலும், புதுச்சேரிக்கு 750 கிமீ தெற்கு – தென் கிழக்கிலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. 21 செமீ-க்கு அதிகமான மழை பொழிவிற்கு வாய்ப்பு என்பதால் நவ.26, 27 ஆகிய 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் மந்தைவெளி, மயிலாப்பூர், அண்ணாசாலை, கிண்டி, அடையார், திநகர், பாரிமுனை, தாம்பரம், குரோம்பேட்டை, எழும்பூர், பட்டினப்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

ராமேஸ்வரம், மற்றும் மன்னார்குடி அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கும்பகோணத்தில் பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் 4 மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து வருகிறது. கடலூர், விருத்தாசலம், நெய்வேலி, வடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Mayiladuthurai ,Nagai ,Thiruvarur ,Thanjavur ,Pudukottai ,Ramanathapuram ,Nellai ,Kanyakumari ,Thenkasi ,Thiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Villupuram ,Cuddalore ,
× RELATED தமிழ்நாடு அரசுக்கு வானிலை ஆய்வு மையம் கடிதம்!!