- வண்டலூர்
- பூங்காவில்
- Icourt
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- வனத்துறை?: பொது
- வந்தலூர் உயிரியல் பூங்கா
- தின மலர்
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உயிரிழந்த குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எந்த தொற்றும் பாதிக்காத வகையில் 10 மாதங்கள் மனுதாரர் சிகிச்சை அளித்த நிலையில், வண்டலூர் பூங்காவில் சேர்க்கப்பட்ட 27 நாட்களில் அது இறந்திருக்கிறது எனக் குற்றம் சாட்டப்பட்டது. குரங்கு குட்டியின் உடற்கூராய்வு அறிக்கையை நவம்பர் 28ம் தேதி தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.
The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் குரங்கு குட்டி உயிரிழந்த வழக்கு: வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.