×

அரியலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

 

அரியலூர், நவ. 23: அரியலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடத்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு; இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்திலுள்ள 149-அரியலூர் மற்றும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 596 வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று மற்றும் நாளை ஞாயிறு ஆகிய தினங்களில் இரண்டாம் கட்ட வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2025- ஐ தகுதி நாளாகக் கொண்டு 18-வயது பூர்த்தியடைந்துள்ள நபர்கள் தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளவும் தகுதியுள்ள நபர்கள் இச்சிறப்பு முகாம்களை பயன்படுத்திகொள்ளலாம். மேலும், கடந்த வாரம் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் மொத்தம் 5,037 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சிறப்பு சுருக்க முறைத் திருத்தம் 2025-இல் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் 6.1.2025 அன்று ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

The post அரியலூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur district ,Ariyalur ,District ,Collector ,Rathnaswamy ,Election Commission of India ,
× RELATED டிசம்பர் 20 தேதி நடக்கிறது எரிவாயு...