×
Saravana Stores

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம்: கலெக்டர் தகவல்

 

திண்டுக்கல், நவ. 23: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: நவ.1ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெற இருந்த கிராமசபை கூட்டம் நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டு இன்று காலை 11 மணி அளவில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 306 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது. இக்கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டியிருக்கும் மகளிர் சுயஉதவி குழுக்களை கவுரவித்தல்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, கூட்டாண்மை வாழ்வாதாரம் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும். எனவே ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் கிராம சபைகளில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Gram Sabha ,Dindigul District ,Dindigul ,Collector ,Boongodi ,Gram ,Sabha ,Local Bodies Day ,
× RELATED 201 கிராம ஊராட்சிகளிலும் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்