- தமிழ் கலைஞர்கள் மன்ற விழா
- லோயர் ரஞ்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி
- திருச்சி
- நகராட்சி உயர்நிலைப்
- திருச்சி கனாரன் வீதி
- தமிழ் மன்றம்
- கலைஞர் தமிழ் மன்ற
- ராமகிருஷ்ணன்
- கலைஞர்களின் தமிழ் கிளப் விழா
- கந்தரன்சலை அரசு உயர்நிலைப்பள்ளி
- தின மலர்
திருச்சி, நவ.23: திருச்சி கீழரண் சாலை மாநகராட்சி மேல்நிலை பள்ளி ஆண்டு விழா மற்றும் கலைஞர் தமிழ் மன்றத்தின் ‘தமிழ்க்கூடல்’ விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவர் டாக்டர் மோகன் கலந்து கொண்டார். திருச்சி மாநகராட்சி மண்டலம் 2ன் மண்டலத்தலைவர் ஜெயநிர்மலா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பஞ்சவர்ணம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘முயற்சியே வெற்றிக்கு முதற்படி’ என்ற தலைப்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மணிகண்டன் சிறப்புரையாற்றினார். திருச்சி மாமன்ற உறுப்பினர்கள் சங்கர், சண்முகப்ரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பட்டதாரி ஆசிரியர் லட்சுமி வரவேற்றார். விழாவில் திரளான மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமையாசிரியை வாணி நன்றி தெரிவித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் பன்னீர் செல்வம், சுதர்சனா மற்றும் மேரி ஷெர்லி ஆகியோர் செய்திருந்தனர்.
The post கீழரண்சாலை அரசு மேல்நிலை பள்ளியில் கலைஞர் தமிழ் மன்ற விழா appeared first on Dinakaran.