×

ஓய்வூதிய ஆணையத்தை கலைத்ததை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஓய்வூதிய ஆணையம் கலைத்ததை கண்டித்து, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் உள்ள கருவூலம் எதிரில், ஓய்வூதிய ஆணையத்தினை கலைத்ததை கண்டித்து, மாவட்ட ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வி.ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிச்சை லிங்கம் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஆணைப்படி ஓய்வூதியர் இயக்குநர் அலுவலகம் கலைக்கப்பட்டது. கடந்த காலங்களில் தேவைகளின் அடிப்படையில் தனித்தனி இயக்குநரகங்களாக உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்த ஓய்வூதிய இயக்குநரகம், அரசு தகவல் தொகுப்பு விவர மையம், சிறுசேமிப்பு இயக்குநரகம் ஆகிய துறைகளை தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறையுடன் இணைப்பது என தமிழக அரசு மேற்படி அரசாணை பிறப்பித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியதாரர்களும் உள்ள நிலையில், அவர்களது ஓய்வூதியம் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் ஓய்வூதிய இயக்குநரகம்தான் கையாண்டு வருகிறது. தனித்துறையாக செயல்பட்ட வந்த காரணத்தால் ஓய்வூதியர்களின் குறைகளை அறிய மாவட்டம் தோறும் குறை தீர்ப்பு கூட்டங்களை, இந்த அமைப்பு நடத்தி ஓய்வூதியர்களின் குறைகளை களைய முயற்சிகள் மேற்கொண்டும் வந்தது.

தனித்துறையாக செயல்பட்டபோதே ஓய்வூதியர்களின் பிரச்னைகளை முழுமையாக தீர்க்க இயலாமல் இருந்த நிலையில், தற்போது இந்த இயக்குநரகத்தை மூடியிருப்பதன் தமிழக அரசின் ஓய்வூதியர்களுக்கு எதிரான போக்கு வெளிப்பட்டுள்ளது என கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில், ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் முன்னாள் மாநில தலைவர் இராஜேந்திரன், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் திருவேங்கடம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மாவட்ட பொருளாளர் சௌதாமணி சத்தியசீலன் நன்றி கூறினார்.

The post ஓய்வூதிய ஆணையத்தை கலைத்ததை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Retired Government Servants Association ,Pension Commission ,Kanchipuram Collector ,Office ,District Retired Government Employees Union ,
× RELATED போக்குவரத்து மாற்றத்தால் வியாபாரம்...