×

நாமகிரிப்பேட்டை அருகே பயங்கர விபத்து லாரி மீது தனியார் பேருந்து மோதி 3 பேர் பலி: 20 பேர் படுகாயம்

நாமகிரிப்பேட்டை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் – சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து நேற்றிரவு ராசிபுரத்துக்கு சென்ற தனியார் பேருந்தில் 37 பேர் பயணம் செய்தனர். இரவு 8 மணிக்கு நாமக்கல் மாவட்டம் மெட்டாலா தாண்டி கோரையாறு பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது டயர் திடீரென வெடித்துள்ளது. இதில் நிலைதடுமாறி வலதுபுறமாக பாய்ந்த பேருந்து ராசிபுரத்திலிருந்து சென்னை நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அன்னோன்(55), பேருந்து ஓட்டுநர் ரவி, பயணி அலமேலு(56) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். கிரேன் கொண்டு வரப்பட்டு லாரிக்கு அடியில் சிக்கிய பேருந்து எடுக்கப்பட்ட பின்னரே உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

The post நாமகிரிப்பேட்டை அருகே பயங்கர விபத்து லாரி மீது தனியார் பேருந்து மோதி 3 பேர் பலி: 20 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Namakrippet ,Namakirippet ,Rasipuram ,Namakkal district ,Attur ,Salem district ,Metala ,Koraiyar ,Dinakaran ,
× RELATED ராசிபுரத்தில் சோதனை:குட்கா பதுக்கிய கடைகளுக்கு அபராதம்