×

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரக் குழுக் கூட்டம்

 

ஈரோடு,நவ.22: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக்குழு கூட்டம் நேற்று ஈரோட்டில் நடைபெற்றது. வட்டாரக்குழு நிர்வாகி எம்.ராணி தலைமை வகித்தார். இதில், கோவை ஈஷா யோக மையத்தின் அத்துமீறல்கள் மீது விசாரணை நடத்த வலியுறுத்தி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்களை கிளை வாரியாக நடத்தி,பெருவாரியானோர் கலந்துகொள்வது, ஈரோடு மாநகராட்சி பகுதியில் உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை கைவிட வேண்டும் என வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டாரச் செயலாளர் கல்யாணசுந்தரம் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். இதில், சி.பி.ஐ. தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், வட்டார துணை செயலாளர்கள் கல்யாணசுந்தரம், கபில்தேவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரக் குழுக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Communist Party ,of India Regional Committee Meeting ,Erode ,Communist ,Party ,of India ,committee ,District Committee Administrator ,M. Rani ,Isha Yoga Center ,Coimbatore ,Mother National Federation of India ,Communist Party of India ,Dinakaran ,
× RELATED இன்று தொடங்கி அடுத்த ஆண்டு டிச.25ம் தேதி...