×

வக்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்க கோரிக்கை

புதுடெல்லி: வக்ப் சட்டத்திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது தலைவரும் பாஜ உறுப்பினருமான ஜதாம்பிகா பால், இந்த கூட்டம் தான் குழுவின் கடைசிகூட்டம் என்றும் அதன் அறிக்கை விரைவில் உறுப்பினர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். கூட்டுக்குழுவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும், மக்களவை சபாநாயகர் ஒம்பிர்லா இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். திங்களன்று தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளில் அறிக்கையை சமர்பிக்கும்படி மக்களவையால் குழு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The post வக்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பதவிக்காலத்தை நீட்டிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Parliamentary ,Committee ,NEW DELHI ,Joint Parliamentary Committee on the ,Parliamentary Joint Committee on the Waqf Board ,BJP ,Joint Committee on the Waqf Amendment ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல்...