×

தமிழகத்தில் காலியாக உள்ள 135 மருத்துவ இடங்களுக்கு 25ம் தேதி முதல் சிறப்பு கலந்தாய்வு: மருத்துவக் கல்வி இயக்ககம் தகவல்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 135 மருத்துவ இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு வரும் 25ம் தேதி முதல் நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் 4 சுற்றுகளாக நடந்து முடிந்துள்ளது. இதில் 6 எம்.பி.பி.எஸ் மற்றும் 28 பி.டி.எஸ் இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. மேலும் தேசிய மருத்துவ ஆணையம், அன்னை மருத்துவ கல்லூரியில் 50 இடங்களும், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவ இடங்கள் 50ல் இருந்து 100 ஆகவும் உயர்த்தியது. ஸ்டான்லி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் மருத்துவ மாணவர் உயிரிழந்த நிலையில் அந்த இடமும் காலியாக உள்ளதாகவும், இதனால் மருத்துவ படிப்பிற்கான காலி இடங்கள் 135 ஆக உள்ளது.

எனவே, மருத்துவ இடங்களை நிரப்ப சிறப்பு கலந்தாய்வு நடத்த தமிழக மருத்துவ கல்வி இயக்குனரகம் தேசிய மருத்துவ ஆணையத்திடம் கோரியது. இதனை ஏற்ற தேசிய மருத்துவ ஆணையம் சிறப்பு கலந்தாய்வு 25ம் தேதி முதல் நடத்தி காலியான மருத்துவ இடங்களை நிரப்ப ஒப்புதல் வழங்கியது. இதனை தொடர்ந்து, சிறப்பு கலந்தாய்வில் பங்கேற்க மருத்துவ கல்வி இயக்குனரகம் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதில், தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு வெளியிட்டுள்ள தகுதி பட்டியலில் இருக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை முடிந்துள்ள 4 சுற்று கலந்தாய்விலும் கலந்து கொள்ளாத மாணவர்கள் இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாது.

 

The post தமிழகத்தில் காலியாக உள்ள 135 மருத்துவ இடங்களுக்கு 25ம் தேதி முதல் சிறப்பு கலந்தாய்வு: மருத்துவக் கல்வி இயக்ககம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Directorate of Medical Education Information ,Chennai ,Directorate of Medical Education ,
× RELATED போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில்...