×
Saravana Stores

நீதிமன்றங்கள் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முன்பு ஜிஎஸ்டி சாலையில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓசூர் நீதிமன்ற நுழைவு வாயிலில் வழக்கறிஞர் கண்ணனை ஆனந்தன் என்பவர் அரிவாளால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அனைத்து வழக்கறிஞர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைக் கண்டித்து நேற்று அனைத்து நீதிமன்றங்களின் நுழைவு வாயிலில் ஏராளமான வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி செங்கல்பட்டு நீதிமன்றம் முன்பு ஜிஎஸ்டி சாலையில் நேற்று காலை வழக்கறிஞர் சங்கங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அனைத்து மாநிலங்களிலும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரியும், அனைத்து நீதிமன்றங்களிலும் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் மதுராந்தகம், செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை சந்திப்பில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்போரூர்: திருப்போரூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு நேற்று திருப்போரூர் பார் அசோசியேஷன் தலைவர் தேவராஜ் தலைமையில் 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷமிட்டனர். இதில், வழக்கறிஞர்களுக்கான சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும், வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றத்தின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும், வழக்கறிஞர்கள் கைத்துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

The post நீதிமன்றங்கள் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,GST ,Kannan Anandan ,Hosur court ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்